Friday, December 27, 2019

32) ஆசிரியர் ஆகாதவர் இயல்பு-1


குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்று
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

தன்னுடைய
இயல்புகளாகப்
பெற்றவரே

நல்ல

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


இதற்கு
மாறாக


போதிக்கும்
குணமில்லாதவர்

இழிந்த குணத்தை
இயல்பாகக் கொண்டவர்

பொறாமை
ஆசை
வஞ்சம்
அச்சம்
ஆளுமை
ஆகியவற்றைத்
தன்னிடம் கொண்டவர்

கழற்குடம்
மடல்பனை
பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு
ஆகியவற்றுக்கு
ஒப்பென்று சொல்லும்படி
மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையவர்

ஆசிரியர் ஆகும்
தகுதி இல்லாதவர்


நன்னூல்
சூத்திரம்-31


மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே

மொழிகுணம் இன்மையும் இழிகுணம் இயல்பும்
அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை
முடம் தெங்கு ஒப்புஎன முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே

போதிக்கும் குணமில்லாமை இழிந்த 
குணத்தை இயல்பாக கொண்டமை
பொறாமை, ஆசை, வஞ்சம், அச்சம்,
ஆளுமை, ஆகியவற்றைத் கொண்டமை
கழல்குடம், மடல்பனை, பருத்திக் குண்டிகை,
முடம் தெங்கு ஆகியவற்றுக்கு ஒப்பென்று 
சொல்லும்படி மாறுபாடு கொண்ட
சிந்தனை உடையோர் ஆசிரியர்
ஆகும் தகுதியற்றவர்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் ஆசிரியர் ஆகாதவர் இயல்பு

Tamil Grammar The Bad Qualities Of The Teacher 




No comments:

Post a Comment