Friday, December 27, 2019

24) பத்து அழகு


பத்து அழகு

The Ten Beauties Of Style

ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

பத்து
அழகுகள்
பொருந்தி
இருப்பது

என்பது
குறித்து

பத்து அழகு
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்


இங்கு


அழகு
என்பது

ஆசிரியர்
தனது நூலை
அலங்கரிப்பதற்கு
அந்நூலில்
அணிகளாகச்
சேர்ப்பவை


அது
(அழகுகள்)
பல இருப்பினும்

தலைமை நோக்கி
அழகு பத்து
என்பது
நூல் வழக்கு


பத்து
அழகுகள்


ஒன்று

சொற்கள்
சுருங்கச் சொல்வது


இரண்டு

பொருள்
விளங்க வைப்பது


மூன்று

வாசித்தவர்க்கு
இன்பம் தருவது


நான்கு

நல்ல
சொற்களைச் சேர்ப்பது


ஐந்து

சந்த இன்பம்
கொண்டிருப்பது


ஆறு

ஆழ்ந்த
கருத்தை உடையது


ஏழு

வரிசைப்படி
வைப்பது


எட்டு

உலக வழக்கு
மாறாமல்
சொல்வது


ஒன்பது

சிறந்த
பயனைத் தருவது


பத்து

விளங்கத் தக்க
உதாரணங்களை
உடையது


நன்னூல்
சூத்திரம்-13


சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கி னிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே

சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல்மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம்உடைத்து ஆதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குஉதா ரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகுஎனும் பத்தே

சொற்கள் சுருங்கச் சொல்லல், பொருள்
விளங்க வைத்தல், வாசித்தவர்க்கு இன்பம்
தருதல், நல்ல சொற்கள் சேர்த்தல்,
சந்த இன்பம் கொண்டிருத்தல், ஆழ்ந்த
கருத்தை உடையதாயிருத்தல், வரிசைப்படி
வைத்தல், உலக வழக்கு மாறாமல்
சொல்லுதல், சிறந்த பயனைத் தருதல்,
விளங்கத் தக்க உதாரணங்களைக் கொண்டிருத்தல்
 எனும் இவை நூலிற்கு
அழகென்று சொல்லப்படும் பத்து ஆகும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment