Friday, December 27, 2019

12) தமிழ் இலக்கண வகைகள்


தமிழ் இலக்கண வகைகள்

Divisions of Tamil Grammar

தொன்மொழி
செம்மொழி

எனும்
பெருஞ்சிறப்புகளைப்
பெற்றது

தமிழ் மொழி
Tamil Language

அது

திராவிட
மொழிக் குடும்பத்தில்
மூத்த மொழி


அதில்
(தமிழ் மொழியில்)


மனிதனின்

உணர்வுகள்
கருத்துகள்
கற்பனைகள்
சிந்தனைகள்


இயற்றமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்

என
முத்தமிழ்
பிரிவுகளில்


நூல் வடிவில்
படித்திடவும்

இசை வடிவில்
கேட்டிடவும்

நாடக வடிவில்
பார்த்திடவும்

கருத்துக்
கருவூலமாய்ப்
படைக்கப்பட்டது

இலக்கியம்
Literature


அதன்
(முத்தமிழ் வடிவிலான
இலக்கியத்தின்)

அமைப்பையும்
அழகையும்
பயன்பாட்டையும்

வழக்குகள்
வரையறைகள்
விதிமுறைகள்

மூலம்
எளிமையாக
விளக்குவது

இலக்கணம்
Grammar


இலக்கண
நூல்களுள்
மிகவும்
பழமையான

அகத்தியர்
இயற்றிய
அகத்தியம்

முத்தமிழுக்கும்
இலக்கணம்
வகுத்ததாகக்
நம்பப்படுகிறது


தமிழில்
முத்தமிழுக்கும்
தனித்தனியே
இலக்கணம்
இருப்பினும்

பொதுவாக


தமிழ் இலக்கணம்
Tamil Grammar
என்பது

செய்யுள்
உரைநடை
ஆகியவற்றின்
தொகுதியாகக்
கருதப்படுகின்ற

இயற்றமிழ்
இலக்கணத்தையே
குறிப்பதாயிற்று


நம்மிடையே
கிடைக்கப்பெறும்
மிகப் பழமையான
இலக்கண நூல்

தொல்காப்பியர்
இயற்றிய
தொல்காப்பியம்

இது
இலக்கிய வடிவிலான
ஓர்
இலக்கண நூல்


அதில்
(தொல்காப்பியத்தில்)

மூன்றிலக்கணமாகச்
(எழுத்து சொல் பொருள்)
சொல்லப்பட்ட
இயற்றமிழ் இலக்கணம்

பிற்காலத்தில்

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்

என
ஐந்து வகைகளாகப்
பகுக்கப்பட்டு

பைந்தமிழ் இலக்கணம்
(ஐவகை இலக்கணம்)
என்று
அழைக்கப்பட்டது


மேலும்

வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள்

இந்த
ஐந்திலக்கணத்தோடு
ஆறாவதாக
புலமை இலக்கணம்
ஒன்றையும் சேர்க்க

அறுவகை இலக்கணம்
என்று
பெயர் பெற்றது



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment