Friday, December 27, 2019

30) ஆசிரியர் இயல்பு-1


நல்லாசிரியர்  ஆசிரியர் இயல்பு

The Qualities Of The Teacher

ஆண்டவன்
படைப்பில்
ஆறறிவு
அதிசயம்

மனிதன்


அம்மனித
வாழ்க்கையின்

சிறந்த
வாழ்வியல்
முறை

அற வழியில்
பொருள் ஈட்டி
இன்பம் துய்த்து
வீடு அடைதல்


அச்சிறந்த
வாழ்வியல்
முறையில்
குறிப்பிடப்படும்

அறம்
பொருள்
இன்பம்
வீடு

ஆகிய
நாற்பொருட்களை
அடைவதே

ஒவ்வொரு
மனிதனின்

இன்றியமையாத
இலட்சியம்


அதனை
(இலட்சியத்தை)
அடைந்திட

தக்கதொரு
துணை


ஆசிரியர்
(குரு ஆசான்
உபாத்தியாயர்)


ஏனெனில்


அவர்
(ஆசிரியர்)


இருளில்
ஒளி காட்டிடும்
சுடர் விளக்கு

கல்லைச்
சிலை ஆக்கிடும்
சிற்பி

பேதையை
மேதை ஆக்கிடும்
அறிவாளி

பகுத்தறிவுக்குப்
பாதை வகுத்திடும்
பகலவன்

அஞ்ஞானத்தை
அறவே ஒழித்திடும்
மெய்ஞானி

பணியைத்
தொண்டாக ஆற்றிடும்
பண்பாளன்

உயர்நிலைக்கு
நம்மை ஏற்றிவிடும்
ஏணிப்படி

தினந்தோறும்
கல்வி கற்றிடும்
மாணவன்


இதுமட்டுமல்ல


அன்பினை
ஊட்டிடும்
அன்னை

வாழ்வைத்
தந்திடும்
தந்தை

அறிவை
அளித்திடும்
அறிஞன்

கலையினைப்
படைத்திடும்
கலைஞன்

கவிதையைக்
கற்பித்திடும்
கவிஞன்

புலமையைப்
வளர்த்திடும்
புலவன்

உலகை
உணர்த்திடும்
சித்தன்

ஞானத்தைப்
போதித்திடும்
ஞானி

எழுத்தினை
அறிவித்திடும்
இறைவன்


இங்கு

இத்தனை
சிறப்புகளுக்கும்
உரிய
ஆசிரியர்

அவசியம்
பெற்றிருக்க
வேண்டிய

இயல்புகள்
எவையென
அறிந்துக்கொள்வோம்


ஆசிரியர்
இயல்புகள்


குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்றுத்
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

பெற்றவரே

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


அந்த
உயர்ந்த
உள்ளத்திற்கு

இந்த

காணொளியைக்
காணிக்கையாக்கி

அகமகிழ்கின்றேன்



நன்னூல்
சூத்திரம்-26


குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
அமைபவ நூலுரை யாசிரி யன்னே.

குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகுஇயல் அறிவுஓடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூல்உரை ஆசிரியன் அன்னே.

குடிப்பிறப்பு, அருளுடைமை, கடவுள் பக்தி
ஆகியவற்றில் உயர் சிறப்பும்; பல
கலைகளையும் கற்று தேர்ந்த அறிவும்;
தாம் கற்றவற்றைப் பிறருக்கு 
எடுத்துரைக்கும் சொல் வன்மையும்;
நிலம், மலை, தராசு, மலர்
ஆகியவற்றிற்கு நிகரான பெருமையும்;
உலகியல் அறிவும்; உயர்ந்த குணமும்
பெற்றவரே நூலாசிரியர் உரையாசிரியர்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment