இறைவனால்
இம்மண்ணுலகில்
படைக்கப்பட்ட
எண்ணற்ற
உயிரினங்களில்
மகத்தானதாய்
மதிக்கப்படும்
மனிதன்
ஆறாம்
அறிவான
பகுத்தறிவை
பெற்றிருந்தும்
கற்காலத்திற்கும்
முந்தைய
பழங்காலத்தில்
தனது
கண்ணால்
கண்டதை
காதால்
கேட்டதை
வாயால் உண்டதை
மூக்கால்
முகர்ந்ததை
மெய்யால்
உணர்ந்த்தை
அறிவால்
அறிந்ததை
மற்றவர்களுடன்
பரிமாறிக்கொள்ள
சத்தங்களையும்
சைகைகளையும்
மட்டுமே
பயன்படுத்தி
வந்தான்
காடுகளிலும்
மலைக்
குகைகளைலும்
தனது
வாழ்க்கையை
வாழ்ந்துவந்த
அவன்
காலப்போக்கில்
கால்போன
போக்கிலும்
மனம்போன
போக்கிலும்
நாடோடிகளாய்
இடம்பெயர்ந்து
சென்று
ஓர்
இருப்பிடத்தையும்
இனத்தையும்
உருவாக்கிக்
கொண்டான்
முதலில்
உணவு
உடை
உறையுள்
ஆகியவற்றில்
மாற்றங்கள்
பல
கண்டான்
நாளடைவில்
நாகரிக
வளர்ச்சி
பெற்ற
அவன்
தன்னுடைய
எண்ணம்
கருத்து
சிந்தனை
ஆகியவற்றை
அடுத்தவருடன்
பகிர்ந்திடவும்
அடுத்த
தலைமுறைக்கு
அதனைப்
பதிவுசெய்து
வைத்திடவும்
ஓர்
ஊடகமாய்
உருவாக்கி
கொண்டதே
மொழி
அது
(மொழி)
மனிதனின்
அறிவு
நிலைப்பட்டுள்ளது
என்பதற்கான
ஓர்
அடையாளம்
மக்களின்
வாழ்வை
உள்ளதை
உள்ளபடி
அப்படியே
பிரதிபலிக்கின்ற
ஒரு
கண்ணாடி
மக்கள்
தங்கள்
கருத்துக்களை
பரிமாறிக்கொள்ளும்
ஒரு
கருவி
ஒலி
வடிவிலும்
எழுத்து
வடிவிலும்
மனித
உணர்வுகளை
உணர்ச்சிகளை
சிந்தனைகளை
செயல்களை
வெளிபடுத்தும்
ஒரு
சாதனம்
மொழி
அறியப்பட்ட
பின்னரே
மனித
வாழ்க்கையில்
பல்வேறு
வளர்ச்சிகளும்
கிளர்ச்சிகளும்
உருவானது
என்பது
தெள்ளத்தெளிவான
உண்மை
காலப்போக்கில்
மொழியானது
தொடர்பு
கருவியாக
மட்டுமல்லாது
அவனது
ஊனிலும்
உயிரிலும்
கலந்து
வாழ்வியல்
கூறாகவும்
தொப்புள்கொடி
உறவாகவும்
மாறிப்போனது
ஆம்...
உலகில்
இன்று
ஏறக்குறைய
ஆறாயிரம்
முதல்
ஏழாயிரம்
வரையிலான
எண்ணிக்கை
கொண்ட
மனித
கண்டுபிடிப்புகளில்
முதலிடன்
பிடிக்கும்
மொழி
ஒவ்வொரு
மனிதனுக்கும்
அவனுடைய
வாழ்வில்
இன்றியமையாத
தேவை
என்பது
அனைவரும்
அவசியம்
அறிய
வேண்டிய
ஓர்
உண்மை.
-கவிஞர்
பொன். இராஜன் பாபு
-Author
P. Rajan Babu
No comments:
Post a Comment