Friday, December 27, 2019

18) பொதுப்பாயிரம்


பொதுப்பாயிரம்

A General Preface

ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்பட்டு

முன்னுரை போல்
அமைகின்ற பகுதி
பாயிரம்


அது
(பாயிரம்)

ஒரு நூலில்

சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்

என
இரு வகைகளில்
அமையும்


சிறப்புப்பாயிரம்
என்பது

அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது


பொதுப்பாயிரம்
என்பது

பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது
இங்கு


பொதுப்பாயிரம்
என்ற தலைப்பில்


பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்

பொதுவான
விவரங்களாய்
அமைவன எவை

என்பது குறித்து

சற்று
விளக்கமாகப்
பார்ப்போம்


மனிதன்


தன்னுடைய
எண்ணம்
கருத்து
சிந்தனை
ஆகியவற்றை

அடுத்தவருடன்
பகிர்ந்திடவும்

அடுத்த
தலைமுறைக்கு
அதனைப்
பதிவுசெய்து
வைத்திடவும்

ஓர்
ஊடகமாய்
உருவாக்கிக் கொண்டது


மொழி

அதன்
(மொழியின்)
பயன்பாடு


ஒலி வடிவில்

சொல்பவன் -
கருத்து -
கேட்பவன்

என்ற
வகையிலும்


எழுத்து வடிவில்

நுவல்வோன்
நூல்
கொள்வோன்

என்ற
வகையிலும்
அமையும்


அவ்வகையில்


நூல்
(எண்ணப் பதிவாகிய
கருத்துகளை
எழுத்து உருவில்
காட்டும் ஒரு கருவி)

நுவல்வோன்
(கருத்தைச்
சொல்பவன்)

நுவலும் திறன்
(கருத்தைச்
சொல்கின்ற
தன்மை)

கொள்வோன்
(கருத்தைக்
கேட்பவன்)

கோடல் கூற்று
(கருத்தைக்
கேட்கின்ற
தன்மை)

ஆகிய
ஐந்தும்

எல்லா
நூல்களுக்கும்
பொதுவானவை


இவற்றைக்
குறித்து

விளங்க
உணர்த்துவது
பொதுப்பாயிரம்


நன்னூல்
சூத்திரம்-3


நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு *மியைபொதுப் பாயிரம்

நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடற் கூற்றுஆம் ஐந்தும்
எல்லா நூற்கும் *இயைபொதுப் பாயிரம்

நூல், நுவல்வோன், நுவலும் திறன்,
கொள்வோன், கோடல் கூற்று என்னும்
ஐந்தும் எல்லா நூற்கும் பொருந்தும் 
(இவற்றை விளங்க உணர்த்துவது) 
பொதுப்பாயிரம்


*இயை - பாடவேறுபாடு



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment